/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
60 நாட்கள் நடைபயணமாக சென்று மக்களை சந்திப்பேன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
/
60 நாட்கள் நடைபயணமாக சென்று மக்களை சந்திப்பேன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
60 நாட்கள் நடைபயணமாக சென்று மக்களை சந்திப்பேன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
60 நாட்கள் நடைபயணமாக சென்று மக்களை சந்திப்பேன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி
ADDED : டிச 18, 2025 05:33 AM

புதுச்சேரி: நான்கு பிராந்தியங்களில் 60 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன் என, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
ரெட்டியார்பாளையத்தில், லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கட்சியின் மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின், அவர், கூறியதாவது:
லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்கள், மண்டல பொதுச் செயலாளர்கள் செயலாளர்களை நியமித்து, அறிமுகம் செய்கிறோம். ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு 60 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இந்த நடை பயணத்தில் மக்களை சந்தித்து, அவர்களுடன் தங்கி பிரசாரம் செய்ய உள்ளோம். புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி பெயரில் பாரதியார் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியது. எப்போதும் பூர்வீகத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. பாரதியார் பெயர் நீக்கத்திற்காக போராட்டம் நடத்தி குரல் கொடுப்போம்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தங்களுடைய உறுதியான நிலைப்பாட்டை கூறாது. திராவிடம் என்ற பெயரில் பதில் சொல்வார்கள். உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பின், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடந்து கொள்ளலாம். படகில் சென்று லட்சிய ஜனநாயக கட்சி கொடி ஏற்றியதிற்கு காங்கிரஸ் சமூக வலைதளத்தில் கப்பல் மூழ்குவதாக தெரிவித்துள்ளனர். ஆட்சியில் இருந்த பொழுது நாட்டை கூறு போட்டது காங்கிரஸ் தான்.
தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 'துரந்தர்' என்னும் இந்தி படத்தில் காங்கிரஸ் எப்படி ஊழல் செய்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளனர். கட்சி தொடக்க விழாவிற்கு எங்களுக்கு படகுகளை வழங்க கூடாது என, பல்வேறு கட்சியினர் மீனவர்களை மிரட்டி உள்ளனர். மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் நாங்கள் அந்த நிகழ்ச்சி நடத்தினோம்.
இதை காங்கிரஸ் உள்ளிட்ட பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஆதரவளிக்க வரும் எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் அவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சியில் விரைவில் பதவிகள் அறிவிக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்த எஸ்.ஐ.ஆரில் புதுச்சேரியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காமராஜர் சட்டசபை தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதால் அதனை எங்கள் குழு மூலம் ஆய்வு செய்ய உள்ளோம்.
உழவர்கரை தொகுதியில் நான் வாக்காளராக சேர்ந்து உள்ளேன். கட்சி தலைமை அலுவலகம் திறப்பதற்கு முன் பணம் கொடுத்தாலும் அதனை பலர் மிரட்டி திரும்ப கொடுக்க வைக்கின்றனர். எங்களுக்கு கட்சி அலுவலகம் திறக்கவே இடம் கிடைக்காத நிலையில் சிவசங்கர் எம்.எல்.ஏ., அவரது சொந்த இடத்தில் எங்களுக்காக கட்சி தலைமை அலுவலகம் திறக்க அனுமதி கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தில் ஆர்வமுடன் இளைஞர்கள் பெண்கள் சேர்ந்து வருகின்றனர். ஜே.சி.எம்., மக்கள் மன்றத்திலிருந்து லட்சிய ஜனநாயக கட்சியில் பணியாற்ற வந்து கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

