/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்
/
சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி துவக்கம்
ADDED : டிச 24, 2025 05:27 AM

புதுச்சேரி: கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், சுடு களிமண் கைவினை பொருள் ஒரு மாதம் பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.
இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், கைவினை அபிவிருத்தி ஆணையம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், சுடு களிமண் கைவினை பொருள் பயிற்சி ஒரு மாதம் வில்லியனுார் பொறையூரில் நடக்க உள்ளது. இதில் தலைமை கைவினை கலைஞர் வெங்கடேசன் தலைமையில் கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டு புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பயிற்சி நுணுக்கங்கள் அளிக்க உள்ளனர்.
இதில் கலந்துக்கொள்ளும் கைவினை கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 வீதம், மாதம் ரூ.7,500 உதவித் தொகை அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
இதன் துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயிற்சியினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சாரங்கபாணி, கைவினை அபிவிருந்தி ஆணையம் உதவி இயக்குனர் ரூப்சந்தர், கலந்து கொண்டனர்.

