/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி அலுவலகம் முன் வாரிசுதாரர்கள் தொடர் உண்ணாவிரதம் : இரு பெண்கள் மயக்கம்
/
உள்ளாட்சி அலுவலகம் முன் வாரிசுதாரர்கள் தொடர் உண்ணாவிரதம் : இரு பெண்கள் மயக்கம்
உள்ளாட்சி அலுவலகம் முன் வாரிசுதாரர்கள் தொடர் உண்ணாவிரதம் : இரு பெண்கள் மயக்கம்
உள்ளாட்சி அலுவலகம் முன் வாரிசுதாரர்கள் தொடர் உண்ணாவிரதம் : இரு பெண்கள் மயக்கம்
ADDED : டிச 23, 2025 04:38 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்கள் நலசங்கத்தினர், கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி உள்ளாட்சி அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றாத, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்கள் நலச்சங்கத்தினர் நேற்று, உள்ளாட்சி துறை அலுவலகம் முன் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, சத்யன் தலைமை தாங்கினார். பிரபு, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சமமேளனம் ஆலோசகர் ஆனந்தகணபதி, அமைப்பு செயலாளர் கலியபெருமாள், செயலாளர் வேளாங்கன்னிதாசன், ஓய்வுதியர்கள் சங்க அமைப்பு செயலாளர் ஆனந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நேரு எம்.எல்.ஏ., அரசு ஊழியர் சம்மேளனம் கவுரவ தலைவர் பிரமேதாசன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் முனுசாமி சிறப்புரையாற்றினர்.
இந்த உண்ணாவிரத போராட்டம், திடீரென தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்ட சந்தானலட்சுமி,35; லலிதா,39; ஆகியோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை போராட்டக்குழுவினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொட்டும் பனியில், இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால் பரப்பு நிலவியது.

