/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நிலவும் கடும் 'டிராபிக் ஜாம்'
/
புதுச்சேரியில் நிலவும் கடும் 'டிராபிக் ஜாம்'
ADDED : டிச 17, 2024 05:26 AM

சுற்றுலா பயணிகள் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தும்
புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் நிலவும் கடும் டிராபிக் ஜாம் புத்தாண்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சின்னஞ்சிறிய நில பகுதியான புதுச்சேரி வளர்ந்து வரும் சுற்றுலா தளம். சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புதுச்சேரியில் குவிகின்றனர்.
புதுச்சேரி நிலவும் கடும் 'டிராபிக் ஜாம்' சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இன்றி உள்ளூர் மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. டிராபிக் போலீசார் பணியில் இருந்தாலும் இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல், நெல்லித்தோப்பு, கொக் பார்க் சிக்னல்களில் நாள் முழுதும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
காமராஜர் சாலை, காந்தி வீதி, அண்ணா சாலையில் தாறுமாறாக நிறுத்தும் ஆட்டோக்கள், கார், சரக்கு வாகனங்களால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரும்போது மட்டும் வேலை செய்யும் டிராபிக் போலீசாரும், பொறுப்பற்ற வாகன ஓட்டிகளும் இதற்கு முக்கிய காரணம். சரக்கு வாகனம், ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியாளர்களிடம் இருந்து அழுத்தம் வரும் என்பதால் ஆட்டோ பக்கமே போலீசார் செல்வது கிடையாது. கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் ஏற்கனவே நிற்கும் பைக்குகள் பின்னால் கார்களை நிறுத்துகின்றனர்.
இதனால் நகரின் அனைத்து சாலைகளும் கடும் டிராபிக் ஜாமில் சிக்கி தவிக்கிறது. டிராபிக் ஜாம் பிரச்னை புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கவர்னர், முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் வரும்போது மட்டும் டிராபிக் சரி செய்து ஏமாற்றும் பழக்கம் மாற்றப்படவேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் சைரன் வைத்த வாகனத்தை கைவிட்டு, சாதாரண வாகனத்தில் நகர பகுதியில் வலம் வந்து உண்மையான டிராபிக் பிரச்னையை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.

