தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னர் தேனீர் விருந்து; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

கவர்னர் தேனீர் விருந்து; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

கவர்னர் தேனீர் விருந்து; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு


ADDED : ஜன 27, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கவர்னர் தேனீர் விருந்தினை தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர்.

குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று தேனீர் விருந்து நடந்தது. கவர்னர் தமிழிசை விருந்தினர்களை வரவேற்று குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலர், காவல் துறை டி.ஜி.பி., அரசு செயலர்கள், பிரெஞ்சு துாதரக துணை துாதர், தேசிய மற்றும் மாநில விருதாளர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.

உதய தினம்


டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை ஒரே யூனியன் பிரதேசமாக உருவான உதய தினமும் நேற்று கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

புறக்கணிப்பு


தேனீர் விருந்தில் வெஜிடபிள் பிரியாணி, சோறு, சப்பாத்தி, தயிர் சாதம், வெங்காய பச்சடி, ரசம், கூட்டு, பொறியல், பக்கோடா உணவுகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் பா.ம.க., வினர் பங்கேற்றனர். இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்., கம்யூ., கட்சியினர் புறக்கணித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us