/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோ--- கோ போட்டி பரிசளிப்பு விழா
/
கோ--- கோ போட்டி பரிசளிப்பு விழா
ADDED : செப் 10, 2025 11:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில் வட்டம் -1 அளவிலான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 14, 17, மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கோ - கோ போட்டிகள் நடந்தது.
இதில், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்,வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், மரப்பாலம் செவன்த்டே மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், செவன்த்டே மேல்நிலைப் பள்ளி முதலிடம், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம், செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளி மூன்றாமிடம், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், செவன்த்டே மேல்நிலைப்பள்ளி முதலிடம், வாசவி இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம், ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது.
17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், இமாகுலேட் இதய பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம், அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், அன்னை சிவகாமி பெண்கள் பள்ளி முதலிடம், இமாகுலேட் பெண்கள் பள்ளி இரண்டாமிடம், திருவள்ளூவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம் பெற்றனர்.
இப்போட்டிகளை நெல்லிதோப்பு, மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் துரை தலைமை தாங்கி நடத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், வட்டம் -1 உடற்கல்வி விரிவுரையாளர் பழனி, ஆசிரியர்கள் தமிழ்இளையன், பாரதிதாசன், தன்ராஜ், ராஜசேகர்,சரவணன், வரதராஜன், கோபு, கருணாகரன், பிரகாஷ், ஜவஹர் பத்மநாபன், வளர்மதி, சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.