தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ

கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ

கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ


ADDED : மார் 21, 2025 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ இயக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.

சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கையில் அசோக்பாபு (பா.ஜ.,) எம்.எல்.ஏ., பேசுகையில், பி.ஆர்.டி.சி., சார்பில் தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு புறநகர் பஸ்களை இயக்க வேண்டும். நகரின் அனைத்து நகர் பகுதிகளுக்கும் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செந்தில்குமார் (தி.மு.க.,) எம்.எல்.ஏ., எனது பாகூர் தொகுதியில் பாகூர் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. அங்கிருந்த பரிக்கல்பட்டு வரை பஸ் வசதி இல்லை. எனவே, பாகூரில் இருந்து பரிக்கல்பட்டு உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க வேண்டும். குறைந்தபட்சம் கட்டணமில்லா ேஷர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய துணை சபாநாயகர் ராஜவேலு, எனது நெட்டப்பாக்கம் தொகுதியிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது. மணமேடு, கரையாம்புத்துார் போன்ற இடங்களுக்கும் இதுபோன்று ஷேர் ஆட்டோ இயக்கலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us