/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பொலிவுறு நகரத் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை' மாஜி எம்.பி., ராமதாஸ் குற்றச்சாட்டு

ADDED : பிப் 02, 2024 03:36 AM
புதுச்சேரி: பொலிவுறு நகரத் திட்டத்தை சரியாக செயல்படுத்தி இருந்தால், புதுச்சேரி முதன்மை நகரமாகி இருக்கும் என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் 2017 ம் ஆண்டு புதுச்சேரி சேர்க்கப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ. 1,828 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை சரியாக செயல்படுத்தி இருந்தால் இந்தியாவிலேயே புதுச்சேரியை முதன்மை நகரமாக்கி இருக்க முடியும். குறைந்தபட்சம் மேம்பாலங்கள் கட்டி நகர போக்குவரத்து நெரிசலை குறைத்து இருக்கலாம்.
புதுச்சேரியோடு தேர்வு செய்யப்பட்ட பல நகரங்கள் திட்டங்களை சரிவர செயல்படுத்தி இலக்குகளை அடைந்துள்ளன. ஆனால் புதுச்சேரியில் 2023ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட திட்டங்கள் அதன் இலக்குகளை அடையவில்லை.
முக்கிய திட்டங்களான குபேர் அங்காடி, ஒருங்கிணைந்த பஸ் நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, தாவர பூங்காவின் மேம்பாடு, சுதேசி மில்லில் காடுகளை வளர்க்கும் திட்டம், பெரிய கால்வாயை புனரமைத்து அழகு படுத்தும் திட்டம் போன்ற திட்டங்கள் ஏழு ஆண்டுகள் ஆகியும் துவங்காமலேயே உள்ளன. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என, கவர்னரால் கூற முடியுமா?.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.