/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பா.ஜ.,வில் இணைந்தார்
/
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பா.ஜ.,வில் இணைந்தார்
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பா.ஜ.,வில் இணைந்தார்
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பா.ஜ.,வில் இணைந்தார்
ADDED : டிச 22, 2025 05:26 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பா.ஜ.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
பா.ஜ., புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பளராக, மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசினார். தொடர்ந்து, முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.
விழாவில், மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசுகையில், 'புதுச்சேரியில், கடந்த தேர்தலில், 6 எம்.எல்.ஏ.,க்களுடன் வெற்றிப்பெற்றுள்ளோ ம்.
வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் 13 எம்.எல்.ஏ.,க்களுடன் வெற்றிபெறுவோம். கட்சியில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரை தேர்தலில் நிறுத்தி, 13வது எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற வைப்போம்' என்றார்.

