தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் முதல்வர் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் நினைவு நாள்


ADDED : ஜூன் 11, 2025 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆம்பூர் சாலை, ஜே.வி.எஸ்., இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், விஜயலட்சுமி சாந்தாபாய் ஜானகிராமன், அசோக், குமார் சந்திரேஷ், குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், எம்.எல். ஏ.,க்கள்., ராஜன், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தியாகராஜன், அவைத் தலைவர் சிவக்குமார், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நந்தா சரவணன், மூர்த்தி, துணை அமைப்பாளர் தைரியநாதன், ஆறுமுகம், காந்தி, தலைமைச் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், காந்தி, வேலன், வேலவன், இளம்பரதி, சக்திவேல், ராமசாமி, வேலவன், ரவீந்திரன் அமுதாகுமார், நர்கீஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, சோமசுந்தரம் அஞ்சலி செலுத்தினர்.

நெல்லித்தோப்பு தொகுதி நிர்வாகிகள் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லித்தோப்பு தொகுதியில் கமல்பாலா, கஸ்துாரிபாய் நகர் சுகுமாரன் கலியசாமி, பெரியார் நகர் பாபு மனோகர், முருகன் கோவில் வீதியில் தமிழ்மணி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us