/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல்படை வீரர் பணிக்கு உடற்தகுதி தேர்வு: 283 பேர் பங்கேற்பு; 74 பேர் தகுதி

ADDED : பிப் 03, 2024 07:29 AM
புதுச்சேரி : ஊர்காவல்படை வீரர் பணிக்கு நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வு இரண்டாம் நாளில் 283 பேர் பங்கேற்றதில், 74 பேர் தகுதி பெற்றனர்.
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் பணியிடங்களை தேர்வு செய்ய அக்., மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், ஆண்கள் பிரிவில் புதுச்சேரியில் 290, காரைக்காலுக்கு 68, மாகி 37, ஏனாமிற்கு 25, பெண்கள் பிரிவில் புதுச்சேரி 58, காரைக்கால் 12, மாகி 9, ஏனாமிற்கு 1 இடம் நிரப்பட உள்ளது.
ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினம் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்கியது.
முதல் நாளில் 500 பேர் அழைக்கப்பட்டு தேர்வு நடந்தது. அதில், 292 பேர் பங்கேற்றதில், 66 பேர் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று 500 பேர் அழைக்கப்பட்டனர். இதில், 283 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
நேற்றைய தேர்வின்போது 2 பேர் காயம் காரணமாக வேறு ஒரு நாளில் உடற்தகுதி தேர்வில் பங்கேற்பதாக கூறி சென்றனர். 74 பேர் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். இன்று 750 பேருக்கும், 5ம் தேதி முதல் 1200 பேர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.