/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
சாரதா கங்காதரன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிராஜா துவக்கி வைத்து, மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்விக்கற்று, நல்ல வேலை வாய்ப்பினை பெற அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார்.
விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை நிர்வாக பேராசிரியர் நடராஜன் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் கல்வி மற்றும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
கல்லுாரி முதல்வர் பாபு, செயலாளர் மற்றும் தேர்வு அதிகாரி மோகன்தாஸ் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தொடர்ந்து, ஒரு வார கால நிகழ்வாக, புதிய மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.