நாளை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: கலெக்டர்
நாளை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: கலெக்டர்
ADDED : அக் 30, 2024 04:31 AM
புதுச்சேரி : நாளை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்பாயம் வழங்கிய உத்தரவின்படி வெடி பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, குறைந்த உமிழ்வு கொண்ட மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரித்து விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், சரவெடிகள், பேரியம் உப்பு உள்ள பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்த பட்டாசுகளை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்போரின் உரிமம் ரத்து செய்யப்படும்.
தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
