/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் வாடகை கடையில் தீ: 3 ஸ்கூட்டர்கள் கருகியது
/
பைக் வாடகை கடையில் தீ: 3 ஸ்கூட்டர்கள் கருகியது
UPDATED : ஜன 03, 2026 09:04 AM
ADDED : ஜன 03, 2026 04:34 AM

புதுச்சேரி: பைக் வாடகை கடை தீப் பிடித்து எரிந்ததில் 3 ஸ்கூட்டர்கள் கருகின.
நெல்லித்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், மிஷன் வீதியில் பைக், ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்களை வாடககைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். ஏழுமலை, நேற்று காலை 9:15 மணியளவில் வழக்கம் போல் தனது கடையை திறந்தார்.
அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு கடையில் தீபிடித்தது. இதனையடுத்து, ஏழுமலை தீயை அணைக்க முயன்றார். அதற்குள் தீ கடை முழுதும் பரவியது.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஐவர் சகாயம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மின்சாரத்தை துண்டித்து, தீயை கட்டுபடுத்தினர்.
இந்நிலையில் தீப் பிடித்து எரிந்ததில் 3 ஸ்கூட்டர்கள் முற்றிலும் எரிந்தது. இதில் 6 இருசக்கர வாகனங்களை பத்திரமாக மீட்டனர்.

