ADDED : பிப் 02, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மூலக்குளத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் சாலையின் நடுவே 2 அடி அகலத்தில், 4 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்துள்ளது.
இந்த சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைக்கு என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். திடீரென சாலையில் பள்ளம் விழுந்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
