ADDED : மார் 21, 2024 07:46 AM

புதுச்சேரி :புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ள, தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து, கலந்துரையாடினர்.
புதுச்சேரிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக தணிக்கை அதிகாரி முகமது மன்ஸ்ருல் ஹசன் மற்றும் வருவாய் அதிகாரி லட்சுமிகாந்தா ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும், நேற்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனை சந்தித்தனர்.
அப்போது இருவரிடமும்,ஓட்டுப்பதிவிற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கினார்.இதையடுத்து தேர்தல் செலவின பார்வையாளர்கள், 1950 கட்டணமில்லா தொலைபேசி கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறை, சுவிதா ஆன்லைன் போர்டல், தபால் ஓட்டு பிரிவு அறை, கோரிமேடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முகாமிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

