/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோர் குழு துவக்கம்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோர் குழு துவக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோர் குழு துவக்கம்
வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோர் குழு துவக்கம்
ADDED : மே 09, 2025 12:10 AM
புதுச்சேரி: காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மகளிர் உணவு தொழில் முனைவோர் குழு துவக்கி வைக்கப்பட்டது.
குருமாம்பபட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் சத்துணவு தயாரிப்பு, சிறுதானியங்களில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, சிறுதானிய ரெடிமிக்ஸ், பாரம்பரிய அரிசியில் குக்கீஸ் தயாரிப்பு, காய்கறி, மீன், இறால் உறுகாய் தயாரிப்பு உள்ளிட் பயிற்சிகள் அளித்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக உணவு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள், உணவு பதப்படுத்துவதற்கான அரசு மானியம் மற்றும் அரசு திட்டங்களை பெறுவதற்கு நெறிமுறைகள் பற்றி எடுத்துரைத்து அவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பயிற்சி பெற்ற 25 வெவ்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர்களை ஒரு குழுவாக இணைத்து 'வெற்றிப் பாதைகள்' மகளிர் உணவு உற்பத்தியாளர்கள் குழுவை தற்போது உருவாக்கி அவர்களுக்கா அடையாள அட்டையை வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார் வழங்கினார்.
குழுவின் பெயர் பலகையை முதல்வர் விஜயக்குமார் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாரதிதாசன் கல்லுாரி உதவி பேராசிரியர் ரஜினி, துணை கல்வி ஆய்வாளர் அனிதா, இன்னர் வீல் ரோட்டரி கிளப் செயலாளர் சுமிதா, தலைவர் அம்புஜவள்ளி, ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 30 பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மனையியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுனர் பொம்மி செய்திருந்தார்.

