/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்
/
பூட்டிய வீட்டில் முதியவர் சடலம்
ADDED : டிச 30, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் பூட்டிய வீட்டிற்கள் முதியவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சித்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபராவ் 65, இவருக்கு சொந்தமான லப்போர்த் வீதியில் உள்ள வீட்டை, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற லசார் கெய் 70, என்பவருக்கு வாடகை்கு விட்டு இருந்தார். இந்நிலையில் லசார் கெய் வீட்டில் இருந்த துார்நாற்றம் வீசுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது லசார் கெய் படுக்கையில் சடலமாக கிடந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

