/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் ஒழிப்பு தன்னம்பிக்கை பயிற்சி
/
போதைப் பொருள் ஒழிப்பு தன்னம்பிக்கை பயிற்சி
ADDED : மார் 20, 2026 07:31 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், தாகூர் கலைக்கல்லுாரியில் போதைப்பொருள் ஒழிப்பு தன்னம்பிக்கை பயிற்சி நடந்தது.
பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், புதுச்சேரி தாகூர் கலை கல்லுாரி ஆங்கில பிரிவு மாணவர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் அறிமதி இளம்பரிதி பயிற்சி அளித்தார்.
ரோட்டரி சங்கத்தின் தலைவர் பரிமளம் தலைமை தாங்கினார். உதவிக்கரங்கள் சசிகுமார் வரவேற்றார்.
டாக்டர் அருண் நாகலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

