sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை

/

சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை

சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை

சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக மாறிய போதை பழக்கம்: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வேதனை


UPDATED : டிச 29, 2025 10:15 PM

ADDED : டிச 29, 2025 10:13 PM

Google News

UPDATED : டிச 29, 2025 10:15 PM ADDED : டிச 29, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : போட்டிகளில் வெற்றி பெற குறுக்கு வழியை பின்பற்றினால், அந்த வெற்றி நிலைக்காது என புதுச்சேரி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

கல்விக் கொள்கை

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கிய துணை ஜனாதிபதியும், பல்கலை வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது 'ஏ பிளஸ்' தகுதிப் பெற்றுள்ளது. சர்வதேச, தேசிய அளவில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள 2 சதம் உயர் விஞ்ஞானிகளின் பட்டியலில், இங்கு பணியாற்றும் பேராசிரியர்களில் 28 பேர் உள்ளனர் என ஸ்டான்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

மாணவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை கட்டமைப்பவர்கள். ஆசிரியர்களாக, கலைஞர்களாக எந்த பணியாற்றினாலும் அதில் மிக சிறப்பான பங்களிப்பை நாட்டுக்கு அளிக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேசிய கல்விக் கொள்கை -2025 வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வை மட்டும் மையப்படுத்துவதாக இல்லாமல் ஒட்டுமொத்த விரிவான மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image 1514774

அடிப்படை உரிமை


கல்வியில் டிஜிட்டல், தீஷா, டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கல்வி அடிப்படை உரிமையாக இருக்கிறது. 5 ஆண்டிற்கு முன் இருந்த தொழில்நுட்பம் இப்போது இல்லை. தற்போதுள்ள தொழில்நுட்பம் எதிர்காலத்திலும் இருக்காது. அதனால் தொழில்நுட்பம் மறுஉருவாக்கம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.

அவசியம்


மேலும், கல்வியில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், பயோடெக்னாஜி உள்ளிட்ட துறைகள் மறுகட்டமைப்பை நோக்கிச் செல்கின்றன. அதனால் கல்வியில் உற்சாகத்தோடும் விழிப்புணர்வோடும் தொழில்நுட்பத்தை தத்தெடுக்க வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தை நோக்கி பிரதமர் மோடி பயணத்தை தொடங்கியுள்ளார். அதற்கு இன்னும் 22 ஆண்டுகள் இருப்பதாகக் கருத வேண்டாம். இலக்கை அடைய அனைவரும் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பு சமுதாயத்தையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்.Image 1514775

பரந்த அறிவு

மாணவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். போதைக்கு அடிமையாகாதீர்கள். உங்களது நண்பர்களையும் போதை பக்கம் செல்ல விடாதீர்கள். இளைய தலைமுறையினரின் போதை என்பது தற்போது சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. கல்விக்கு எல்லை இல்லை. அந்த கல்வியை கற்பதற்கான காலம் மிகக்குறைவு. எவ்வளவு கற்றாலும் கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு என்கின்றனர்.எனவே, நீங்கள் பரந்த அறிவு கடலில் இருந்து, அன்னப்பறவைபோல், நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கவும். படித்தவற்றில் நல்லதை மட்டும் நமதாக்கி கொள்ள வேண்டும்.



உயர்த்தும் சக்தி


வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. போட்டி இல்லாத உலகம் என்றைக்கும் இருந்ததாக சரித்திரம் இல்லை.

போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக குறுக்குவழிகளை ஒருபோதும் கடைபிடிக்கக்கூடாது. அது ஏதோ வெற்றியை தருவது போல் தோற்றத்தை தரும். ஆனால், ஒட்டுமொத்த தோல்வியை ஒருநாள் தந்து விடும்.


கல்வி வேலைக்கு மட்டுமல்ல, உங்கள் பட்டம் பதவிக்கு மட்டுமல்ல. அது உங்களை நல்ல மனிதர்களாக பொறுப்புள்ள குடிமக்களாக, குடும்பத்தையும், தேசத்தையும் நேசித்து உயர்த்தும் சக்தியாக மாற வேண்டும்.நமக்கு நேரமில்லை. பெற்றோரிடம் பேசக்கூட நேரமில்லை என்று நினைக்கிறோம்.



வெற்றி


Image 1514776

நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கடவுளே இந்த மண்ணில் வந்து அவதரித்தாலும், அவருக்கும் 24 மணி நேரம்தான். அந்த நேரத்தை எப்படி ஒதுக்குகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய உயர்வு இருக்கிறது. அதை சரியாக செய்வது நம்முடைய கடமை.


பள்ளியில் படிக்கும்போது கால அட்டவணையை பின்பற்றி இருப்போம். அதுபோல் வாழ்க்கைக்கும் கால அட்டவணை தேவை. நேரத்தை சரியாக கடைபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us