'தினமலர்' கோலம் கோலப்போட்டியில், விழிப்புணர்வு வாசகங்களுடன், தினமலர் நாளிதழ் சிறப்புகள் குறித்த கோலங்களும் இடம் பெற்றிருந்தன. உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமலர் நாளிதழ் படியுங்கள் என்றும் வெளிப்படுத்தி இருந்தனர்.
125 நாள் வேலை திட்ட கோலம் அண்மையில் நுாறு நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை வரவேற்று, ஆயுர்வேத மருத்துவர் சீதாலட்சுமி டிசைன் கோலம் போட்டு அசத்தியிருந்தார்.
நீடித்த வளர்ச்சி கோலம் வறுமை, பட்டினி, சுகாதாரம், கல்வி, உலக வெப்பமயமாதல், பாலின சமன் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனம் செலுத்த ஐக்கிய நாடுகள் சபை இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதை நோக்கி உலக நாடுகள் பயணித்து வருகின்ற சூழ்நிலையில், தினமலர் கோலப்போட்டியிலும் எதிரொலித்தது. இது, புதுச்சேரி பெண்களின் உலகளாவிய பார்வையை வெளிப்படுத்தியது.
போக்குவரத்து விதிமீறல் சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, வாகனங்களில் பறப்பதால், விபத்துகள் நடக்கி்றது. இந்த போக்குவரத்து விதிமுறை மீறல் புதுச்சேரியில் அதிக அளவிலேயே நடக்கிறது. இந்த கவலையை கோலம் வெளிப்படுத்திய பெண்கள், அனைவரும் சிக்னல்களை மதிக்க வேண்டும் என வேண்டுகோளும் வைத்திருந்தனர்.

