/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய மின் விளக்கு அமைக்க தி.மு.க.,எம்.எல்.ஏ., கோரிக்கை
/
சூரிய மின் விளக்கு அமைக்க தி.மு.க.,எம்.எல்.ஏ., கோரிக்கை
சூரிய மின் விளக்கு அமைக்க தி.மு.க.,எம்.எல்.ஏ., கோரிக்கை
சூரிய மின் விளக்கு அமைக்க தி.மு.க.,எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : டிச 30, 2025 04:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தெரு மின் விளக்குகளை சோலார் மின் விளக்குகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி சாலைகளில் உள்ள தெரு விளக்குகளை மின்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் நிறுவி பராமரித்து வருகின்றனர்.
தெரு விளக்குகளை பராமரிக்கும் நிர்வாகங்கள், அதற்கு உண்டான மின் கட்டணத்தை மின்துறைக்கு செலுத்த வேண்டும். ஆனால் மின் துறைக்கு உள்ளாட்சி நிர்வாகம் மின் கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ளது.
இதனால் மின்துறை பொருளாதார நெருக்கடியில் உள்ளது. முதலியார் பேட்டை தொகுதி, மறைமலை நகரில் சென்சார் பொருத்தப்பட்ட 10 சூரிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த சென்சார் மூலம் ஆள் நடமாட்டம் உள்ள பொழுது அதிக ஒளியுடனும், ஆள் நடமாட்டம் இல்லாத பொழுது குறைந்த பொலியுடனும் இயங்கும். இதன் மூலம் சூரிய சக்தியால் உற்பத்தியாகும் மின்சாரமும் மிச்சப்படுத்தப்படுகிறது.
ஆகையால் சூரிய மின் விளக்குகளை புதுச்சேரி முழுவதும் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

