/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க., நாடகம்: எம்.பி. செல்வகணபதி விமர்சனம்

ADDED : டிச 16, 2025 04:08 AM
புதுச்சேரி: இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பது போல நடிப்பதற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை தி.மு.க., பெரிதுபடுத்துகிறது. என புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும் ஒரே உணர்வுடன் ஒவ்வொரு கார்த்திகை தீபத் திருநாளில் இது போன்ற தீபம் ஏற்றும் நடைமுறை பல்லாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்று கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தீர்ப்பினை அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க., அரசு ஏற்கவில்லை.
முதல்வரின் துணைவியார் கோவில்களுக்கு செல்கிறார். கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்றுகிறார். ஆனால் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற தி.மு.க., இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
பார்லிமென்ட்டின் இரு அவைகளில் தி.மு.க., உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து பேசினர். அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பது போல நடிப்பதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறது தி.மு.க., என்றார்.