/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

ADDED : டிச 29, 2024 07:20 AM

வானுார்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டம் தெரிவித்து, பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில், நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, கவுரவத்தலைவர் மணி, எம்.எல்.ஏ.,க்கள் சிவக்குமார், சதாசிவம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
l தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சமூகநீதியை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
l தமிழ்நாட்டில் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
l மழை வெள்ளத்தால் சேதமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
l காலியாக உள்ள 6.25 லட்சம் அரசுப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
l என்.எல்.சி., நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
l தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.
l அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பாதுகாப்பு வழங்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
l புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
இவை உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.