/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உருளையன்பேட்டையில் குடிநீர் கேன்கள் வழங்கல்
/
உருளையன்பேட்டையில் குடிநீர் கேன்கள் வழங்கல்
ADDED : செப் 12, 2025 03:54 AM

புதுச்சேரி: குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு சார்பில் இலவச குடிநீர் கேன் வழங்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
உருளையான்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, புது தெரு,
ஒத்தவாடை வீதி, நேரு நகர்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பலர் பாதிக்கப்பட்டனர். அதனைக் கண்டித்து நேரு எம்.எல்.ஏ., போராட்டம் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டறியும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.
இப்பணி முடியும் வரை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக தினசரி குடிநீர் கேன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் இலவசமாக குடிநீர் கேன் வழங்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.