sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கழிவுநீர் பெருக்கெடுக்கும் உப்பனாறு வாய்க்காலுக்கு விடிவு காலம்! களம் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

/

கழிவுநீர் பெருக்கெடுக்கும் உப்பனாறு வாய்க்காலுக்கு விடிவு காலம்! களம் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

கழிவுநீர் பெருக்கெடுக்கும் உப்பனாறு வாய்க்காலுக்கு விடிவு காலம்! களம் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

கழிவுநீர் பெருக்கெடுக்கும் உப்பனாறு வாய்க்காலுக்கு விடிவு காலம்! களம் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்


ADDED : மே 23, 2024 05:41 AM

Google News

ADDED : மே 23, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உப்பனாறு வாய்க்காலில் மழைநீர் மட்டுமே செல்லவும், கழிவுநீர் பெருக்கெடுப்பதை தடுக்கவும் புதிய திட்டத்தை பொதுப்பணித்துறை செயல்படுத்த உள்ளது.

புதுச்சேரி நகரின் மையப் பகுதி வழியாக செல்லும் உப்பனாறு வாய்க்கால், சென்னையின் கூவம் நதியை போல மாறி விட்டது. மழை நீர் செல்வதற்காக கட்டப்பட்ட இந்த வாய்க்காலில் கழிவுநீரே ஆறு போல பெருக்கெடுத்து செல்கிறது.

இதன் காரணமாக, துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், நகரின் அழகும் சீர்குலைகிறது. இதுமட்டுமல்லாமல், நகரத்தின் கொசு உற்பத்தி பண்ணையாகவும் உருவெடுத்துள்ளது. புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மழைநீர் மட்டுமே உப்பனாறு வாய்க்காலுக்கு வர வேண்டும். ஆனால், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கழிவுநீரை சுத்திகரித்த பிறகே வாய்க்காலில் விட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர் பெருக்கெடுப்பதை தடுப்பதற்கு, பொதுப்பணித்துறையின் புதிய தலைமை பொறியாளராக பொறுப்பேற்றுள்ள தீனதயாளன் தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்கி உள்ளனர்.

உப்பனாறு வாய்க்காலில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் செல்ல வேண்டும், மற்ற நேரங்களில் வறண்டு காட்சியளிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்காக, உப்பனாறு வாய்க்காலில் எந்தந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை, அகமதாபாத்தில் இருந்து சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை மற்றும் கல்லுாரி வளாகத்தில் இருந்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஜீவானந்தபுரம், கொக்கு பார்க், ஞானபிரகாசம் நகர், சாரம் வழியாக உப்பனாற்றில் கலக்கிறது.

முதல்கட்டமாக, ஜிப்மரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தலைமை பொறியாளர் தீனதயாளன், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிபுணர் சக்திவேல், உதவி பொறியாளர்கள் லுாயிபிரகாசம், வைத்தியநாதன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாகி உள்ள நகர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுநீர் உப்பனாறு வாய்க்காலில் கலப்பதை தடுக்கும் வகையில், குழாய்கள் அமைத்து கழிவுநீரை திப்ராயப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு மையத்துக்கு நேரடியாக எடுத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திப்ராயப்பேட்டையில் ஏற்கனவே 17 எம்.எல்.டி., திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ளது.

தற்போது, 15 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகள் முடிந்து செயல்வடிவம் பெற்றால் உப்பனாறு வாய்க்கால் சுத்தமான தண்ணீர் ஓடும் வாய்க்காலாக மாறும். மேலும், சேதமடைந்துள்ள உப்பனாறு பகுதிகளை சீர் செய்து அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சின்ன வாய்க்காலுக்கு 'விடிவு காலம்'


'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சின்ன வாய்க்கால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இருந்தபோதும், கழிவுநீர் துர்நாற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடுவது தொடர் கதையாக உள்ளது.

இந்த வாய்க்காலில் செல்லும் கழிவுநீரை சிறப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உப்பனாறு பாலத்துக்கு 'விமோசனம்'


புதுச்சேரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, காமராஜர் சாலையையும், மறைமலை அடிகள் சாலையையும் இணைக்கும் வகையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதற்காக, கடந்த 2008ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய பணிகள் உடனடியாக நின்று போனது.

கடந்த 2016ம் ஆண்டில், மீண்டும் பணிகள் துவங்கி நடந்து வந்தது. பாதி பாலம் கட்டப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 2019ல் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

அரைகுறையாக நிற்கும் உப்பனாறு மேம்பாலத்தை கட்டி முடிக்கவும் புதிய தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆய்வு நடத்தினார்.

மண்ணின் மைந்தர் பொறுப்பேற்பு


பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக பணியாற்றிய சத்தியமூர்த்தி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, தலைமை பொறியாளர் பதவியை கூடுதல் பொறுப்பாக பழனியப்பன் கவனித்து வந்தார். அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, வீரசெல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, நிரந்தரமான தலைமை பொறியாளரை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தண்ணீர் வாரியத்தின் ஆலோசகராக பணியாற்றிய தீனதயாளன் புதிய தலைமை பொறியாளராக டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

இவர், புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us