/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' மெகா கோலப்போட்டி: புதுச்சேரியில் 28ம் தேதி நடக்கிறது முன்பதிவு செய்ய இன்று காலை 9 மணிக்கு ரெடியா இருங்க...
/
'தினமலர்' மெகா கோலப்போட்டி: புதுச்சேரியில் 28ம் தேதி நடக்கிறது முன்பதிவு செய்ய இன்று காலை 9 மணிக்கு ரெடியா இருங்க...
'தினமலர்' மெகா கோலப்போட்டி: புதுச்சேரியில் 28ம் தேதி நடக்கிறது முன்பதிவு செய்ய இன்று காலை 9 மணிக்கு ரெடியா இருங்க...
'தினமலர்' மெகா கோலப்போட்டி: புதுச்சேரியில் 28ம் தேதி நடக்கிறது முன்பதிவு செய்ய இன்று காலை 9 மணிக்கு ரெடியா இருங்க...
ADDED : டிச 22, 2025 04:49 AM
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ், சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தும் 'மெகா கோலப்போட்டி' புதுச்சேரி கடற்கரை சாலையில் வரும் 28 ம்தேதி நடக்கிறது. இதற்கான முன்பதிவு இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பெண்களின் கோலத் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்க 'தினமலர்' நாளிதழ், மெகா கோலப் போட்டியை நடத்தி வருகிறது.
இந்தாண்டு புதுச்சேரி சுற்றுலாத் துறையுடன் இணைந்து வரும் 28ம் தேதி கடற்கரை சாலையில் வண்ணமயமாக நடக்கிறது. போட்டி காலை 5:30 மணிக்கு சரியாக துவங்கும்.
புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் 18 முதல் 65 வயதிற்குட் பட்ட புதுச்சேரி மாநிலத்தினை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
கோலமிடும் நேரம் கோலமிடுவதற்கு ஒவ்வொருவருக்கும் 4க்கு 4 அடி இடம் ஒதுக்கப்படும். அந்த பகுதியில் மட்டுமே கோலமிட வேண்டும். கோலமிட தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வர வேண்டும். கோலமிட ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
உதவிக்கு... வண்ணங்கள் சங்கமிக்கும் கோலத்தினை போட உதவி தேவைப்படும். அதற்கு அனுமதி உண்டு. ஆனால், கோலமிட 18 வயதிற்கு மேல் உள்ள பெண் ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்து வரலாம்.
முன்பதிவு 'தினமலர்' கோலப்போட்டிக்கான முன்பதிவு ஆன்லைனில் இன்று 22ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மெகா கோலப் போட்டியில் பங்கேற்க முடியும். மொபைல் போனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
வாட்ஸ் ஆப் மற்றும் நேரில் முன் பதிவு கண்டிப்பாக செய்யப்பட மாட்டாது. அத்துடன், வரும் 28ம் தேதி போட்டியில் பங்கேற்க வரும்போது, கண்டிப்பாக முன்பதிவு செய்த கூப்பனையும், ஆதார் நகலையும் கொண்டு வர வேண்டும். உங்களுடைய மொபைல் போனில் இருந்து ஒருமுறை மட்டுமே கோலப்போட்டிக்கு முன் பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
பரிசு மழை போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு மனதை கவரும் பரிசுகள் காத்திருக்கிறது.
முதலிடம் பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி பங்கேற்கும் அனைவருக்குமே பரிசு மழை காத்திருக்கிறது.

