/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 24, 2025 09:42 PM

பாகூர், : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார்.
சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேல் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
சுகாதார ஆய்வாளர் புகழேந்தி நோக்கவுரையாற்றினார். தொடர்ந்து, பள்ளியில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் பங்கேற்று பாகூர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் துரைசாமி, வினோத், சிவபாலன், பிரபாவதி, சத்தியவதி, பாக்கிலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, கார்திகேயன், ரம்யா, சங்கீதா, மூத்த செவிலியர் பவுனாம்மாள், சுகாதார உதவியாளர் ரவிக்குமார், செவிலியர் ரேவதி, ஆஷா பணியாளர் தேவி ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.