sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து கேட்க முடிவு: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வாய்ப்பில்லை

/

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து கேட்க முடிவு: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வாய்ப்பில்லை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து கேட்க முடிவு: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வாய்ப்பில்லை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து கேட்க முடிவு: ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வாய்ப்பில்லை


ADDED : மே 27, 2024 05:09 AM

Google News

ADDED : மே 27, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான காலக்கெடுவை அடுத்தாண்டு வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தில் மூன்றாம் கட்டத்தில் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும்.

குறிப்பாக தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக் கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல், கண்காணிப்பு கேமரா, நடைபாதை மேம்பாடு பணிகள்தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம். புதுச்சேரியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மாநிலங்களின் நகரங்கள் இலக்குகளை நிறைவு செய்யும் நோக்கில் நெருங்கி வருகின்றன.

அந்த மாநிலங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் படுவேகத்தில் அரங்கேறி இருக்க புதுச்சேரியில் மட்டும், படு மந்தமாக நடந்து வருகின்றது.

ஸ்மார்ட் சிட்டி காலக்கெடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள சூழலில் திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மிகவும் பின் தங்கி உள்ளது.

வரும் ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடிக்க வாய்ப்பில்லை.

இது தொடர்பாக தலைமை செயலர் தலைமையில் விவாதித்த ஸ்மார்ட் சிட்டி குழு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக 100 கோடி,மாநில அரசின் பங்களிப்பாக 32 கோடி என மொத்தம் 132 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகின்றது.

இப்பணிக்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அதற்கடுத்து தற்போது ஸ்மார் சிட்டி திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுச்சேரி மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் இன்னும் நிறைவு பெறவில்லை. அந்த மாநிலங்களும் காலக்கெடு நீட்டிப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

எனவே அம்மாநிலங்களுக்கு சேர்த்து புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைசியாக புதுச்சேரி அரசு 1048 கோடி ரூபாய் அளவிற்கு திட்டப் பணிகளை அனுப்பி இருந்தது. ஆனால் யூனியன் பிரதேசங்களுக்கு 930 கோடிக்குள்ளாக திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

இதன் காரணமாக நீண்ட காலமாக நடக்க திட்டங்களை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் கைவிட்ட சூழ்நிலையில் இப்போது பெரிய மார்க்கெட் உள்பட பல்வேறு திட்டங்களை கைவிட்டு, இறுதியாக 620 கோடி ரூபாய் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us