/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு டீன் நியமனம்
/
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு டீன் நியமனம்
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு டீன் நியமனம்
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு டீன் நியமனம்
ADDED : மே 09, 2025 03:25 AM
புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியாக ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1994ம் ஆரம்பிக்கப்பட்டாலும் நிர்வாக சிக்கலில் சிக்கி தள்ளாடுகின்றது.
பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் திணறி வருகின்றது. இந்த நிறுவனத்தை திட்டமில்லா செலவினங்களின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றது.
மேலும் நிறுவன முதல்வரை மற்ற நிறுவனங்களிலிருந்து நியமிப்பது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டு நியமனத்திற்கும் கூடுதலாக இரண்டு கோடி ரூபாயை விடுப்பு சம்பள பங்களிப்பு, டெபுடேஷன் போன்றவற்றை இந்நிறுவனம் செலுத்த வேண்டும். இதற்கு பதிலாக இக்கல்லூரியின் அனுபவமிக்க மூத்த பேராசிரியர்களை நியமப்பதின் மூலம் ஓரளவு நிதிச்சுமையைக் குறைக்கலாம் என கோரிக்கை வலுத்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் தினமலரில் செய்தி வெளியான நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து கல்லுாரி பேராசிரியர் முருகவேலை டீனாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான ஆணையை கால்நடை துறை இணைச் செயலர் சுந்தரராஜன் பிறப்பித்துள்ளார்.

