/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை (தனி) தொகுதிக்கு காங்., வேட்பாளர் அறிவிப்பு
/
திருபுவனை (தனி) தொகுதிக்கு காங்., வேட்பாளர் அறிவிப்பு
திருபுவனை (தனி) தொகுதிக்கு காங்., வேட்பாளர் அறிவிப்பு
திருபுவனை (தனி) தொகுதிக்கு காங்., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : டிச 20, 2025 06:31 AM

திருபுவனை: திருபுவனை (தனி) தொகுதி காங்., வேட்பாளராக வேலு அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருபுவனை தொகுதி வட்டார காங்., பொதுச்செயலாளர் வேலு ஏற்பாட்டில் சோனியா பிறந்த நாளையொட்டி, 15 ஆயிரம் பெண்களுக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி வம்புப்பட்டு கிராமத்தி ல் நடந்தது.
விழாவிற்கு வட்டார தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்கபெருமாள் தலைமை தாங்கினர். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர்கள் தனுசு , இளையராஜா, செந்தில்குமரன், ரகுபதி, மோகன்தாஸ், முன்னிலை வகித்தனர். வட்டார பொதுச் செயலாளர் வேலு வரவேற்றார்.
விழாவில்,காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.
அப்போது, வரும் சட்டசபை தேர்தலில், திருபுவனை (தனி) தொகுதியை காங்., கட்சிக்கு கேட்டு பெறுவோம். அதில் காங்., வேட்பாளராக வட்டார காங்., பொதுச்செயலாளர் வேலு நிறுத்தப்படுவார். அவர் இன்று உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளார். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்து, உங்கள் தொகுதியை வளமாக்கிக் கொள்ள வேண்டும்' என்றனர்.
நிகழ்ச்சியில், வட்டார தலைவர் பரமசிவம், பி.சி.சி., நடராஜன், நிர்வாகிகள் அமிர்தராஜ், கார்த்திகேயன், சுந்தரம், சுந்தரமூர்த்தி, ஜெயபாலன், சேகர், பெரியண்ணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

