sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 08, 2024 03:08 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்


மேட்டுப்பாளையம் சந்திப்பு, உழவர்கரை செல்லும் சாலையில் இந்தியன் வங்கி அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

கண்ணன், மேட்டுப்பாளையம்.

ஆபத்தான பள்ளங்கள் மூடப்படுமா


அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சாலையில், அங்காளம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளங்கள், மூடாததால் வாகன ஓட்டிக்கள் கடும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

சிவா, அரியாங்குப்பம்.

பிள்ளையார்குப்பத்தில் இருந்து கடலுார் செல்லும் சாலையில், சாலை அமைக்கும் பணி மந்தமாக நடப்பதை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும்.

உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.

வைசியாள் வீதியில் சுகாதார சீர்கேடு

ராஜ்பவன் தொகுதி, வைசியாள் வீதியில், வடிகால் வாய்க்கால் அடைப்பதால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சுமதி, ராஜ்பவன்.

ஜெயா நகரில் கும்மிருட்டு


உழவர்கரை ஜெயாநகர் மேற்கு பகுதியில், பல நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால், சாலை இரண்டு கிடப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது.

பெருமாள், உழவர்கரை.

இருண்டு கிடக்கும் பாலம்

கடலுார் சாலை இடையார்பாளையம் ஆற்று பாலங்களில், மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடப்பதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கர். தவளக்குப்பம்.

சாலை சீர்கேடு

கிருமாம்பாக்கம் முதல் பிள்ளையார்குப்பம் வரையிலான கடலுார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

பிரதாபன், புதுச்சேரி

கிரில் கம்பிகளால் ஆபத்து

புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள கிரில் கம்பிகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

ராஜேஷ், புதுச்சேரி.






      Dinamalar
      Follow us