தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு தேதி அறிவிப்பு

சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு தேதி அறிவிப்பு

சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வு தேதி அறிவிப்பு


ADDED : ஆக 07, 2025 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறையில் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர், அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு கடந்த 13ம் தேதி நடப்பதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கான போட்டி தேர்வு வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

அதன்படி, ஏ.என்.எம்., அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 23ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை முதல் தாள், மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரை இரண்டாம் தாள் நடக்கிறது.

சுகாதார உதவியாளர் பணிக்கு 23ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை முதல் தாள், 24ம் தேதி மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரை இரண்டாம் தாள், மருந்தாளுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை முதல் தாள், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை இரண்டாம் தாள், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை முதல் தாள், 25ம் தேதி காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கிறது.

போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின், ஆட்சேர்ப்பு வலைத்தளம் https://recruitment.py.gov.in, விண்ணப்பதாரர்கள் போர்ட்டலில் வெளியிடப்படும் என, அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us