/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார்களை மூடாவிட்டால் போராட்டம் கம்யூ., கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
/
ரெஸ்டோ பார்களை மூடாவிட்டால் போராட்டம் கம்யூ., கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
ரெஸ்டோ பார்களை மூடாவிட்டால் போராட்டம் கம்யூ., கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
ரெஸ்டோ பார்களை மூடாவிட்டால் போராட்டம் கம்யூ., கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
ADDED : நவ 08, 2024 05:24 AM

புதுச்சேரி: மக்களை பாதிக்கும் ரெஸ்டோ பார்களை மூடாவிட்டால் மக்களை திரட்டி பேராட்டம் நடத்தப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
புதுச்சேரி மா.கம்யூ., அலுவலகத்தில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், தேசிய கவுன்சில் உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம், நிர்வாகி பெருமாள், மா.கம்யூ., எம்.எல்., செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:
புதுச்சேரியில் சிறுமிகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமி புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது புதுச்சேரிக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றாவளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பது, போதை கலாசாரத்தை அரசே ஊக்குவிக்கும் நிலைமைதான் உள்ளது.
ரெஸ்டோ பார்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவில் போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. கோவில்கள், குடியிருப்புகள் அருகில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சுற்றுலா என்ற பெயரில் தடையற்ற மது விற்பனைக்கு அனுமதி கொடுப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் சாலையோர ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கலெக்டர் போலீசுடன் சென்று சாலையோர வியாபாரிகளை துன்புறுத்துகின்றனர்.
எனவே 2021க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது என்று கம்யூ., கட்சிகள் முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக தலைமை செயலரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
இப்பிரச்னைகளை அரசு தீர்க்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

