தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புயலால் பாதித்த இலங்கைக்கு உதவி; பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி

 புயலால் பாதித்த இலங்கைக்கு உதவி; பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி

 புயலால் பாதித்த இலங்கைக்கு உதவி; பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி


ADDED : நவ 29, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரதமருக்கு முதல்வர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிர் இழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கேற்று, அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை கொள்கையின் படி இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us