/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி
/
பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி
ADDED : டிச 21, 2024 08:37 AM

புதுச்சேரி : சிதம்பரம் பரமேஸ்வர தீட்சிதர், இறந்ததையொட்டி, அவருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிதம்பரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர தீட்சிதர், 85. இவர், நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இறந்தார். இவர், ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் உள்ளிட்ட 4 வேதங்கள், 12 திருமுறைகளை 45 ஆண்டுகளாக படித்து வந்தார்.
சிதம்பரம், நடராஜ சஹஸ்ரநாமத்தை உலகெங்கும் ஒளிக்க செய்தவர். அதர்வண வேதத்தில் உள்ள மைத்ராயன்ய சாகை அழியும் நிலையில் இருந்ததை, அதனை நாசிக் சென்று மாணவர்களுக்கு கற்று கொடுத்தார். அவர் 100க்கும் மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கியவர்.
அவர் இறந்ததையொட்டி, அவருக்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம், கோமாதா கோவிலில் உள்ள, வேதா ஆஸ்ரம குரு குலத்தில், நேற்று மாலை, அவரது திரு உருவ படத்தை வைத்து, சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேதசாம் ராட், ராஜா சாஸ்திரி தலைமையில், குருகுல மாணவர்கள், வேதங்கள் படித்து, அஞ்சலி செலுத்தினர்.

