/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரிக்கமேடு சுற்றுலா இடம் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
அரிக்கமேடு சுற்றுலா இடம் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : செப் 15, 2025 02:11 AM
புதுச்சேரி: அரிக்கமேட்டை பெரிய சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், அவர், பேசியதாவது:
அரிக்கமேடு புதுச்சேரியில் இருக்கும் பலருக்கு தெரியுமா என்பது சந்தேகம். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் வரலாற்று பூர்வமான மாநிலம். இதில் அடங்கியுள்ள தொன்மையான தொல்லியல் சிறப்பை, ஆராய்ந்து வெளியே கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.
அரிக்கமேட்டை கண்ட றியும் முன், புதராக இருந் தது. நான் இன்னும் அந்த இடத்துக்கு செல்ல வில்லை. நமது முன்னோர் கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அரிக்கமேடு உதாரணம்.
இது பழமையான கலாசாரத்தின் பிம்பம். அதை பெரிய சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.