தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் : முதல்வர் பாராட்டு

பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் : முதல்வர் பாராட்டு

பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் : முதல்வர் பாராட்டு


ADDED : மே 08, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக பிரதமர், இந்திய ராணுவத்திற்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்துார்' பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முற்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக, பிரதமருக்கும், இந்திய ராணுவத்திற்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி அரசு என்றும் துணைநிற்கும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us