/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்து மோசடியில் சி.பி.ஐ., விசாரணை வலியுறுத்தல்
/
கோவில் சொத்து மோசடியில் சி.பி.ஐ., விசாரணை வலியுறுத்தல்
கோவில் சொத்து மோசடியில் சி.பி.ஐ., விசாரணை வலியுறுத்தல்
கோவில் சொத்து மோசடியில் சி.பி.ஐ., விசாரணை வலியுறுத்தல்
ADDED : அக் 17, 2024 12:25 AM

புதுச்சேரி : காரைக்கால் பர்வதீஸ்வரர் கோவில் சொத்து மோசடியில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்த மனு;
காரைக்கால் ஸ்ரீபர்வதீஸ்வரர்கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சருக்கு நெருக்கமானவர்களும், ஆளும் கட்சி உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் செல்வாக்கு மிக்கவர்களும் அந்த மாவட்டத்தின் அரசு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சதி செய்து நிலத்தை அபகரித்துள்ளனர்.
இலவச மனைப்பட்டா வழங்குவதாக ஒரு வெளித் தோற்றத்தை உருவாக்கி அந்த நிலம் 170 மனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதனை குறைந்த விலையில் வாங்கிய நபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் அளவில் கையூட்டு பெற்றுள்ளனர். இந்த கோவில் நிலத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும்.
இந்த மோசடியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகள், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளதால், விசாரணையின் முடிவில் இந்த நிலமே கோவிலுக்கு சொந்தமில்லை என எடுத்துக்கூறும் அளவிற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

