/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவருக்கு கத்தரிக்கோல் குத்து மனைவி மீது வழக்குப் பதிவு
/
கணவருக்கு கத்தரிக்கோல் குத்து மனைவி மீது வழக்குப் பதிவு
கணவருக்கு கத்தரிக்கோல் குத்து மனைவி மீது வழக்குப் பதிவு
கணவருக்கு கத்தரிக்கோல் குத்து மனைவி மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 02, 2024 04:02 AM
புதுச்சேரி : மது குடிக்க பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், கணவரை கத்தரிக்கோலால் குத்திய மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
ரெட்டியார்பாளையம், சரவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன், 27. இவரது மனைவி தேன்மொழி. இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
ஹரிகரன் மது குடிப்பதற்கு தேன்மொழியிடம் பணம் கேட்டார். அவர், பணம் இல்லை என கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, தேன்மொழி, அருகேபூக்கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஹரிகரனை குத்தினார்.
படு காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் தேன்மொழி மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.