/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பஸ் செக்கரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
/
தனியார் பஸ் செக்கரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
தனியார் பஸ் செக்கரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
தனியார் பஸ் செக்கரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 17, 2024 12:12 AM
புதுச்சேரி: மூலக்குளத்தில் டைமிங் பிரச்னையில் தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய, மற்றொரு தனியார் பஸ் உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை பிராமினர் வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம், 21; தனியார் பஸ்சில் டிக்கெட் பரிசோதகர். இவர் கடந்த 12ம் தேதி இந்திரா சதுக்கம் அருகே பணியில் இருந்தபோது, இவரது பஸ்சின் டைமிங்கில் மற்றொரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தது.
இதனை சிவலிங்கம் கண்டித்ததால், அவர்களுக்குள்தகராறு ஏற்பட்டது. அதில், கோபமடைந்தபயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பஸ்சின் உரிமையாளர் அண்ணாதுரை, ஊழியர்கள் பிரேம், கார்த்திக் ஆகியோர் சிவலிங்கத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில், அண்ணாதுரை உட்பட மூவர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.