/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசை தாக்க முயன்ற நபர் மீது வழக்குப் பதிவு
/
போலீசை தாக்க முயன்ற நபர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூலை 06, 2025 07:05 AM
அரியாங்குப்பம் : சிக்னலை மதிக்காமல் சென்றவரை தட்டி கேட்ட போலீசாரை, தாக்க முயன்றவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் முருகன். இவர் நேற்று முன்தினம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், சிக்னலில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த கலியமூர்த்தி சிக்னலை மதிக்காமல் சென்றார்.
போலீஸ் முருகன், அவரை நிறுத்தி ஏன் சிக்னலை மதிக்காமல் செல்கிறாய் என கேட்டார். ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, போலீஸ் முருகனை தாக்க முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில், கலியமூர்த்தி மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

