ADDED : மே 06, 2025 04:59 AM

புதுச்சேரி: பிரான்சை சேர்ந்த ஆசிரியர் கீர்த்தியாள் பவானியின் 'கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்' நுால் வெளியீட்டு விழா நடந்தது.
புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள ரெவியே சொசியால் அரங்கில் நடந்த விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். நக்கீரன் முய்ல் பெரி வரவேற்றார். ராஜவேலு, ஜெயபாலன், நச்சினார்க்கினியன் முய்ல் பெரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நுாலை வெளியிட்டார்.
முதல் நுாலினை முய்ல் பெரி பெற்றுக் கொண்டார். விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நல்லாசிரியர் பூங்குழிலி பெருமாள், தேசிய விருதாளர் ஆதவன் ஆகியோர் நுாலாய்வு செய்தனர். நுாலாசிரியர் கீர்த்தியாள் பவானி ஏற்புரையாற்றினார். முனைவர் லட்சுமிதத்தை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் திரளான கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்மணி கோதண்டபாணி நன்றி கூறினார்.

