ADDED : ஜன 24, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளன 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் இன்று (24ம் தேதி) நடக்கிறது.
கருவடிக்குப்பம், ஓம்சக்தி அவென்யூவில் உள்ள சங்க அலுவலக கெமிஸ்ட் பவனில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் ரத்ததான முகாமில் இந்திராகாந்தி அரசு மருத்துவ மனையின் மருத்துவக் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.
இதில், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

