/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிடைக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிடைக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிடைக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பேரின்பம் ஆன்மிக உணர்வால் மட்டுமே கிடைக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : டிச 28, 2025 05:48 AM

புதுச்சேரி: பிறந்ததால் வருவது வாழ்வு. பிறப்பின் பயனை உணர்ந்ததால் வருவது உய்வு என ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உபன்யாசம் கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. நேற்றைய 12 நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்:
பகவத் கீதையில் பகவான் உபதேசித்த கர்மா, அகர்மா, விகர்மா ஆகியவற்றை பகவதி கீதையான திருப்பாவையில், ஆண்டாள் 11ம் பாசுரத்திலும், 12ம் பாசுரத்திலும் உட்பொருளாகச் சொல்கிறாள். விகர்மாவில் கர்மாவாவைக் காண் என்று பகவான் கிருஷ்ணன் உபதேசித்துள்ளான். செய்யக்கூடாததிலும் செய்யக் கூடியதை காண்பது என்று இதற்குப் பொருள். தர்மத்தைக் காக்க அவசியம் கருதி சொல்லும் பொய் அதர்மமாகாது என்றும், விதிக்கப்பட்ட தர்மங்களை விசேஷ தர்மத்திற்காக செய்யாமல் விடலாம் என்பதையும் பகவத் கீதையில் விளக்கியுள்ளதை பகவத் கீதையான திருப்பாவையில் இந்தப் பாசுரத்தில் உள்ளுறைப் பொருளாக அருளியுள்ளாள்.
அப்படியே 12ம் பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்.பால் நினைந்தூட்டும் தாயின் பரிவை, 'கன்றுக்குப் பசிக்குமே' என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், எருமைகள் கறக்காமலேயே பாலைச் சுரக்கத் தொடங்கின என்று இந்தப் பாசுரத்தில் சொல்லி, மனிதராயினும், மிருகமாயினும் தாயன்பு நிகரற்றது என்பதைச் சொல்லியுள்ளாள் ஆண்டாள்.
பிறந்ததால் வருவது வாழ்வு. பிறப்பின் பயனை உணர்ந்ததால் வருவது உய்வு. உய்வு என்பது பெரும் பதம். அதாவது பேரின்பம். பேரின்பம் என்பது துன்பம் சிறிதும் கலவாத இன்பம். அத்தகைய பேரின்பம் ஆன்மீக உணர்வால் மட்டுமே கிடைக்கும் . அத்தகைய பேரின்பத்தை இப்புவியில் வாழும் போதே நாம் அடைய முடியும் என்பதை உணர்த்துவதே ஆன்மீக உணர்வு. அதை உணர்ந்து, வாழத் துவங்கி, உய்யவும் தெரிந்து கொண்டால் இந்த வைய வாழ்வே பேரின்பமாகும்.

