/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., இருசக்கர வாகன ஊர்வலம்
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., இருசக்கர வாகன ஊர்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., இருசக்கர வாகன ஊர்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., இருசக்கர வாகன ஊர்வலம்
ADDED : ஆக 14, 2025 06:52 AM

புதுச்சேரி : சுதந்திர தினத்தையொட்டி, உழவர்கரை மாவட்டம் பா.ஜ., சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் ஜான்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
மாநில துணை தலைவர்கள் ரத்தினவேல், சரவணன், அகிலன், மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாரயணன், மாநில செயலாளர்கள் தமிழ்மாறன், கோகிலா மகளிரணி தலைவி தாமரைசெல்வி, இளைஞரணி தலைவர் வருண், பட்டியலணி தலைவர் காத்தவராயன், சிறுபாண்மையினர் அணி தலைவர் சார்லஸ், ஊடக பிரிவு நாகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்புதுரை, ஆறுமுகம், செல்வகுமாரன், மாவட்ட பொது செயலாளர்கள் ரமணா ஷங்கர், ஆனந்தன், மாவட்ட செயலாளர்கள் கணபதி, சத்தியமூர்த்தி, ஆறுமுகம் செந்தில்குமார், பொருளாளர் முத்துகுமராசாமி உட்பட பலர் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.
ஊர்வலம், காமராஜர்நகர் தொகுதியில் தொடங்கி காலாப்பட்டு, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கதிர்காமம் வழியாக சென்று உழவர்கரையில் முடிவடைந்தது.
மாவட்ட பொது செயலாளர் ரமணாஷங்கர் நன்றி கூறினர்.