/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேசிய செயல் தலைவருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு
/
பா.ஜ., தேசிய செயல் தலைவருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு
பா.ஜ., தேசிய செயல் தலைவருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு
பா.ஜ., தேசிய செயல் தலைவருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு
ADDED : டிச 21, 2025 06:11 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேட்டிற்கு நேற்று மாலை வந்த பாஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபினை புதுச்சேரி மாநில தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றனர்.
அதனைதொடர்ந்து இளைஞர் அணி தலைவர் ஆடலரசு தலைமையில் மோட்டார் பைக்கில் ஊர்வலமாக, திறந்த வாகனத்தில் அவரை அழைத்து சென்று, பாரதியார், அம்பேத்கர் சிலைகளுக்கு நிதின் நபின் மாலை அணிவித்தார்.
பின், ஆனந்தா இன்னில் நடந்த சக்தி கேந்திரா மற்றும் வல்லுநர் கூட்டத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, எம்.பி., செல்வகணபதி, எம்.எல். ஏ.,க்கள் தீப்பாய்தான், கல்யாணசுந்தரம், செல்வம், சாய் சரவணன்குமார், ராஜசேகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், அசோக் பாபு, புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், துணைத் தலைவர் ரத்தினவேல், மாநில செயலாளர் கோகிலா, நகர மாவட்ட தலைவர் விஷ்ணு ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

