/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக அமைச்சர் மீது பா.ஜ., எம்.எல்.ஏ., புகார்
/
தமிழக அமைச்சர் மீது பா.ஜ., எம்.எல்.ஏ., புகார்
ADDED : ஏப் 11, 2025 11:58 PM

புதுச்சேரி; இறைநம்பிக்கையை புண்படுத்தும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக் பாபு தலைமையில் நிர்வாகிகள், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 6ம் தேதி கட்சி நிகழ்ச்சியில், வைணவம், சைவம் என விளக்கி ஆபாசமாக பேசியிருப்பது வன்முறையை துாண்டும் விதமாகவும், சனாதான தர்மத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதால், பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மக்களின் இறை நம்பிக்கையை அவதுாறு செய்தல் மற்றும் கடுமையாக அவமதிக்கும் செயலை அரங்கேற்றிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதுாறு கருத்துகளை பரப்ப நினைக்கும் மக்கள் விரோத சக்திகளையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

