/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வல்லுநர்கள் சந்திப்புக் கூட்டம்
/
பா.ஜ., வல்லுநர்கள் சந்திப்புக் கூட்டம்
ADDED : டிச 22, 2025 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாடும் சந்திப்புக் கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.
கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்புரையாற்றினார். மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா பல்வேறு துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினார். பா.ஜ., மாநிலத் தலை வர் ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., தொழில் பிரிவு தலைவர் டாக்டர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், 'வரும் தேர்தல்களை முன்னிட்டு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொழில் துறை வழியாக பொதுமக்கள் பயனடைய செய்ய வேண்டும். தொழில் துறைகளின் வளர்ச்சியின் மூலம் புதுச்சேரியை மேலும் முன்னேற்ற வேண்டும்.
அனைவரும் ஒன்றுபட்டு மாநில வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்' என்றார்.

