/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதி வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
/
துணை ஜனாதிபதி வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : செப் 11, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதை முன்னிட்டு புதுச்சேரி பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், போட்டியிட்ட, ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதையொட்டி, புதுச்சேரி பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், இந்திரா சதுக்கம் அருகே பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.